பாரதியார் விழா

வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி!
வாழிய வாழிய வே!

நம் பள்ளியில் மகாகவி. சி. சப்பிரமணிய பாரதியாரின் பிறந்த தினமான 11/12/2025 அன்று அவரை நினைவுகூறும் வகையில் பாரதியார் தினம் சிறப்பாகக்   கொண்டாடப்பட்டது.

வகுப்பு ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களைக் கொண்டு அன்றைய  கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் பாராதியின்  முகமூடி அணிந்து அவரின்  எழுச்சி மிகு கவிதைகளைக்  கூறினர் . நடனம், பாரதியின்  வாழ்க்கை நிகழ்வுகளைக் கொண்ட நாடகம் , குழு பாடல், பாரதியாரின் வாழ்க்கை வரலாறு குறித்த காணொளி விளக்கம் போன்றவை அன்றைய கலை நிகழ்ச்சிகள்  இடம்பெற்றன. இந்த நிகழ்ச்சிகளை மாணவர்கள் உற்சாகத்துடன் கண்டு மகிழ்ந்தனர்.

பாரதியாரின் தேசப்பற்று, சமூக சீர்திருத்தக் கருத்துகள் மற்றும் பெண் விடுதலை பற்றிய சிந்தனைகள் நிகழ்ச்சிகள் மூலம் அழகாக எடுத்துரைக்கப்பட்டன.

இவ்விழா மாணவர்களிடையே தேசபக்தியையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தியது.